Sunday, April 29, 2012

காதல்

1காதலர் தினம் இன்று ...
என் காதலுக்கு வயதொன்று கூடியது...
என் 'காதல்' மட்டும் வயதாகாமல் அப்படியே பசுமையாய்...

காதலர்  மனம் இன்று ...
மனதை ஒருமுக படுத்துவது தியானம்.
மனதை உன்முக படுத்துவது காதல்.
எப்போதவது தான் மனதை ஒருமுக படுத்த முடிகிறது. ஆனால்
எப்போதும் மனதை உன்முக படுத்த எளிதில் முடிகிறதே !!


காதல்

காதலித்துப்பார் கவிதை வரும்...
கவிதை எழுத நினை காதல் வரும்...
இரண்டும் ஒட்டிபிறந்த இரட்டை பிறவிகள்.

காதல்

காதல் - கைரேகை போன்றது.
ஒருபோதும் ஒன்றுபோல் மற்றொன்று கிடையாது.
- Govind .K

Wednesday, March 24, 2010

கல்வியில் சிறந்து விளங்கும் இளையபெருமாள்நல்லூர்

எங்கள் ஊரான இளையபெருமாள்நல்லூர் கல்வியில் சிறந்து விளங்கும் கிராமம். இங்கு ஓர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், ஓர் ஆதி திராவிடர் நலத் தொடக்கப் பள்ளியும் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூறாண்டு காலப் பழமையும், பல அறிஞர்களையும், சான்றோர்களையும் உருவாக்கிய பெருமையையும் கொண்டது.இங்கு பயின்றவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களையும் உருவாக்கி உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் இங்கு தங்கள் தொடக்கக் கல்வியைப் பயின்று வருகின்றனர். ஆங்கில வழிக் கல்விக்காக சிலர் அருகில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி அல்லது மீன்சுருட்டியில் உள்ள ஆங்கில வழிக் கல்வி நிலையங்களிலும் பயின்று வருகின்றனர்.
மேலும், அருகிலிருக்கும் மீன்சுருட்டியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலை மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பைத் தொடர்கின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் அரசுப் பொதுத் தேர்வுகளில் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று ஊருக்குப் பெருமை தேடித் தருகின்றனர். பல முறை இவ்வூர் மாணவர்கள் மாவட்ட மற்றும் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். மாநில அளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று அரசின் சலுகைகளுடன் கல்வி பயின்றுள்ளனர்.

கல்விப் படிப்பை முடித்தவர்கள் நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளில் தங்கள் பட்டப் படிப்பைச் சிறப்புடன் பயின்று பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். நல்ல கல்வியினால் நல்ல பணிகளில் பல துறைகளில் சிறந்து விளங்கி ஊருக்குப் புகழ் சேர்த்து வருகின்றனர். இன்னும் வரும் தலைமுறையினரும் சிறந்த கல்வியைப் பயின்று சிறந்திட முன்னுதாரணங்களாகவும் விளங்குகின்றனர். இவ்வாறு கல்வியில் சிறந்து விளங்கும் எங்கள் ஊரைப் பற்றி எழுதியதில் பெருமை அடைகிறேன்.

இவண்,
கி.விக்னேஷ்

Sunday, March 14, 2010

Population of Elayaperumalnallur - 2001

Population of Elayaperumalnallur

CENSUS OF INDIA - 2001 ( RURAL / URBAN )
DISTRICT : ARIYALUR TALUK : Udayarpalayam
BLOCK : JAYANKONDAM

POPULATION

TOTAL 3072
MALE- 1578
FEMALE- 1494

SC TOTAL – 1452
MALE-732
FEMALE- 720

ST TOTAL-73
MALE-37
FEMALE- 36

Current Population will be .....

Tuesday, February 10, 2009

அருள்மிகு பிணிதீர்த்த அம்மன் ஆலயம் - இளயபெருமாள்நல்லூர்


*குல தெய்வ வழிபாடு அனைவருக்கும் நல்ல பலனை தரும்.*
பிணியினை நீக்கும் பிணிதீர்த்த அம்மனின்
அணிதிகழ்ந்து இலங்கு அடியினை போற்றி!
பிறவியை அறுத்து மறலியை கடிந்து
அறமெலாம் சிறந்திட அருளினை அருள்வாய்.
- புலவர் கோ.குஞ்சிதபாதம் பிள்ளை.